டில்லியிலுள்ள லேடி இர்வின் காலேஜில் ஒரு புது கண்டுபிடிப்பு: ஈஷாவில் பயிற்றுவிக்கும் ஒம்கார உச்சாடனத்தினால் விளையாட்டு வீரர்களின் உடலில் ஈரப்பதத்தின் தன்மை அதிகரிக்கிறது என்பதுதான் அது.

எதற்காக இந்த உச்சாடனம்?

விளையாட்டு வீரர்களுக்கு விளையாடும் பொழுது தண்ணீர் குடிப்பதின் அவசியத்தைப் பற்றி எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், பல வீரர்கள் உடலில் நீரின் குறைபாடால் ஏற்படும் வறட்சியில் அவதிப்பட்டார்கள் என்று மிஸ். அகர்வால் மற்றும் டாக்டர். லால் இருவரும் புரிந்து கொண்டார்கள். இதனால் அவர்களது விளையாட்டிலும் உடலிலும் தொய்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், நீண்ட கால ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

டாக்டர். லால் சொல்கிறார்: “விளையாட்டு வீரர்களுக்கு உடலின் நீர்த்தேவையை பற்றி எடுத்துச் சொல்லி, பாடம் புகட்டி உள்ளது. நீரின் அவசியத்தைப் பற்றி செய்தித் தகவல்கள், அனுபவமிக்க செய்முறைகள் மூலம் செய்தித் தொகுப்புகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் புரிதலை தெரிந்து கொள்ள, சில அடிப்படை சோதனைகள் புரிந்து பார்த்ததில், எல்லோருமே 100% தேர்ச்சி பெற்றார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இருந்தது ஆனால் அதை செய்யத்தான் இல்லை. இந்த புரிதலுக்கும் - அதை நடைமுறையாக்குவதற்க்கும் ஏதோ ஒரு இணைப்பு தேவையாக இருந்தது. தாகத்தை உணர்ந்து செயல்படக்கூடிய ஆழ்ந்த விழிப்புணர்வு தேவையாக இருந்தது. இதற்கு ஒம்கார உச்சாடனம் ஒரு பதிலாக இருக்கக் கூடுமோ?

omkara-dhyanam-puthiya-araichi-mudivugal-1

21 நாட்கள் முடிவில், விளையாட்டுக்குப் பிறகு செய்த சோதனையில், ஓம்கார பயிற்சி செய்த குழுவிலுள்ள வீரர்களை மற்ற குழுவுடன் ஒப்பிட்டு பார்த்ததில், அவர்களின் உடல் ஈரப்பதம் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிந்தது. இது அவர்களின் விளையாட்டின் செயலாக்கத்திலும், இருதய துடிப்பு மற்றும் உடல் சுறுசுறுப்பிலும் வெளிப்பட்டது.

ஓம்கார உச்சாடனத்தின் உடல் மற்றும் மனம் சார்ந்த பயன்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆனால் மிஸ்.அகர்வால், டாக்டர் லாலுடைய ஆராய்ச்சி ஈஷாவில் பரிமாறும் ஓம்கார உச்சாடனம் மற்ற எல்லாவற்றையும் விட எந்த விதத்தில் வித்தியாசமானது, தனித்தன்மை வாய்ந்தது என்பதைக் குறித்து இருந்தது. சமீபத்திய ஒரு இந்திய ஆராய்ச்சி ஓம் என்பது ஒரெழுத்து என்றது. ஆனால் ஈஷா யோக மையம் அதை மூன்றெழுத்து என்கிறது என்றார் மிஸ். அகர்வால். ஷாம்பவி மஹாமுத்ராவின் ஆக்கப்பூர்வமான விளைவுகளைப் பற்றி பேசுகையில் அவர் தொடர்கிறார், “ஓம் உச்சாடனத்தை ஒரு பகுதியாக கொண்ட யோக பயிற்சிகள் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்று சமீப காலமாக செய்திகள் கூறுகின்றன”. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் ஓம் உச்சாடன தியானத்தை ஒரு கருவியாக-உடலின் ஈரப்பதத்தை உணர-அந்த புரிதலுக்கும்-நடமுறையாக்குவதற்கும் உள்ள இணைப்பாக-தேர்ந்தெடுத்தனர்.

பரிசோதனை ஆய்வு காலக் கட்டத்தில், 30 விளையாட்டு வீரர்களை தொடர்பின்றி இரு குழுவாக - கட்டுப்பாட்டுக் குழு என்றும் சோதனைக் குழு - என்றும் பிரித்தார்கள். கட்டுப்பாட்டுக் குழுவுக்கு ஏற்கனவே தண்ணீரின் அவசியத்தைப் பற்றி கொடுக்கப் பட்ட திட்டமிட்ட பாடத் தொகுப்புகளும், மற்றொரு குழுவான சோதனைக் குழுவிற்கு பாடத்தொகுப்புகளோடல்லாமல் 21 நிமிட ஓம்கார உச்சாடன பயிற்சியும் 21 நாட்களூக்கு கொடுக்கப் பட்டது. அந்த 21 நாட்கள் முடிவில், விளையாட்டுக்குப் பிறகு செய்த சோதனையில், ஓம்கார பயிற்சி செய்த குழுவிலுள்ள வீரர்களை மற்ற குழுவுடன் ஒப்பிட்டு பார்த்ததில், அவர்களின் உடல் ஈரப்பதம் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிந்தது. இது அவர்களின் விளையாட்டின் செயலாக்கத்திலும், இருதய துடிப்பு மற்றும் உடல் சுறுசுறுப்பிலும் வெளிப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்கள் முன்னைவிட ஆனந்தமாகவும், அமைதியாகவும், ஒரு முனைப்போடும் இருப்பதாக கூறினார்கள்.

“பல போட்டியாளர்கள் முன்னை விட அவர்களின் விளையாட்டில் செயல்திறன் அதிகமானதாகவும், பல பலன்களை உணர்வதாகவும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு போட்டியாளர் தன் வீட்டிலுள்ளவர்களுடனான உறவு மேம்பட்டுள்ளது என்று பகிர்ந்து கொண்டார். அவர்கள் எல்லோருமே இந்த ஆராய்ச்சி மூலம் பண்பட்டவர்களாக மாறி இருந்தார்கள். இந்த ஆராய்ச்சி பல சாத்தியங்களுக்கான ஒரு திறவுகோலாக இருக்கும். ஈஷா பரிமாறும் தியானங்களினால் ஏற்படும் பல வெவ்வேறு பயன்களை பற்றி அறிய, மேலும் இரண்டு ஆராய்ச்சிகளுக்கு திட்டமிட்டு இருக்கிறோம்” என்று டாக்டர். லால் கூறினார்.